Monday, March 03, 2008

"நீயா நானாவும்" எனது வாழ்க்கையும்

மொதல்ல "நீயா நானா" விஜய் தொலைகாட்சியுடைய நிகழ்ச்சி பார்க்க ஆரம்பிச்சது சும்மா பொழுது போக்குக்காக தான். நீயா நானாவில் எடுத்துக்கொள்ளும் தலைப்புகள் எல்லாம் ரொம்ப அருமையா இருக்கும். உதாரணத்திற்கு "இளமையான அம்மா VS இளமையான மகள்", " காதலை சொல்ல முதலில் தயங்குவது ஆனா பெண்ணா?", "மகிழ்ச்சியான காலம் - திருமணத்திற்கு முன்பா? பின்பா?". இப்படிப்பட்ட ஜாலியான தலைப்புகள் பார்க்க மிகவும் போழுதுபோக்காவும், மனதிற்கு மகிழ்ச்சியை தருவதாகவும் இருக்கும். இந்த நிகழ்ச்சியை நடத்திவரும் Mr.கோபிநாத் அவர்கள் மிகவும் அருமையா பேசுவார். எப்பொழுது பேச்சின் திசையை மற்ற வேண்டும், எப்படி சூடான விவாதங்களை தவிர்த்து முக்கியமான விடைகளை மேடைக்கு கொண்டு வரவேண்டும் என்பதில் எல்லாம் மிகவும் தேர்ச்சி பெற்றவர். அவர் பேசும் அழகான தமிழை பார்த்தால் நமக்கே அவரை பின்பற்றி தமிழை காக்க வேண்டும் போல் தோன்றும். அவரிடம் இருந்து பல நடைமுறையில் இருக்கும், ஆனால் நமக்கு தெரியாத தமிழ் வார்த்தைகளை கற்று கொள்ளலாம்.

இந்த "நீயா நானா" நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளும் தலைப்புகள் எல்லாமே சமுதாயத்தை சிந்திக்க வைக்கும் தலைப்புகளாகவே இருந்திருகின்றன. "புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி", "ஜோடிதத்தை நம்புகிறவர்கள் vs நம்பாதவர்கள்", "அதிர்ஷ்டத்தை நம்புகிறவர்கள் vs நம்பாதவர்கள்", "போது இடத்தில் காதல் செய்யலாமா கூடாதா?". இந்த வரிசையில் சேரும் தலைப்பு தான் "பொய் சொல்பவர்கள் VS உண்மை சொல்பவர்கள்". நான் பார்க்கிற எல்லா "நீயா நானா" நிகழ்ச்சிகளிலேயும் என்னால் என்னை சம்பந்தப்படுத்திப் பார்க்க முடியும். அவ்வளவு எதார்த்தமாக இருக்கும் இந்த நிகழ்ச்சி. அப்படித்தான் இந்த "பொய் VS உண்மை" நிகழ்ச்சியிலும் ஆரம்பத்தில் நான் "பொய் சொல்லலாம்" பக்கம் இருந்தேன். வாழ்கையில் சிறு சிறு பொய்கள் சொல்லலாம். அது மற்றவரை பாதிக்காதவரையில், இது எனது நினைப்பு. ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் தெரிந்து கொண்டேன். வாழ்கை என்பது வரமா? தவமா? அல்லது வாய்ப்பா? என்பது நமது கையில் இருக்கிறது. அதை ஏன் தவமாக எடுத்துக்கொண்டு போராடி சாதிக்க கூடாது? நமது கனவை நாம் தேடி ஓடுகிற பொழுது அதன் இலக்கை தான் நாம் பர்கிரோமே தவிர, அதன் பாதையை நாம் பெரிதாக மதிப்பதில்லை. அங்கங்கே பொய் சொல்லினால் பரவாயில்லை, கடைசியில் நாமும் நமது குடும்பமும் வசதியாக, சந்தோசமாக இருப்பதுதான் முக்கியம், என்று தான் நாம் ரொம்ப காலமாக நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஏன்னா அதான் நடைமுறை, practicality. நான் ஒரு நடைமுறை மனிதன் என்று சொல்லிக்கொள்வதில் நாம், ஏன் நானும் தான் பெருமைபடுகிறோம். ஆனால், இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு இந்த எண்ணம், ஒரு தவறான சாக்கு போக்கோ என்று என்னை சிந்திக்க வைத்தது.

உண்மை பேச வேண்டும் என்ர பக்கத்திலிருந்து பேசியவர்களின் வாதத்தை பார்த்த பொழுது, எனக்குள்ளும் ஒரு ஆசை எழுந்தது. நானும் முடிந்த வரையில் உண்மை பேசினால் என்ன? என் வாழ்கையில் நான் என்னென்ன பொய்களை சொல்லி இருக்கிறேன் என்று யோசித்து பார்த்தேன். சிரிப்பும், வேதனையும் மாறி மாறி வந்தது எனக்கு. பள்ளிக்கூடத்தில் படித்த பொழுது ஒரு முறை "பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டில் எதோ பேய் இருக்கிறதாம். எல்லாரும் சென்று பார்கிறார்கள், வா நாமும் சென்று அந்த பேயை ஒரு முறை பார்த்து விட்டு வரலாம்" என்று நானும் எனது தோழியும் சென்றோம். அந்த வீட்டில் பேய் இருந்ததோ இல்லையோ, என்னை அது வம்பில் மாட்டி விட்டது. நாங்கள் பள்ளிக்கூடத்தை விட்டு வெளியில் சென்ற நேரம் பார்த்து என் அக்கா என்னை தேடிக்கொண்டு வர, நான் இல்லாமல் போனதால் பிறகு நாங்கள் பார்த்துக்கொள்ளும் போது, எங்கே சென்றாய் என்று கேட்க, எனக்கு பொய் சொல்ல சரியாக வராமல், மாட்டிக்கொள்ள, என் அப்பாவிடம் போட்டு கொடுத்து விட்டாள். ஒரு மணி நேரம் முட்டி போட்டேன் என் வீட்டின் முன். ஆனால் இப்பொழுது எல்லாம் மிகவும் நம்பகமாக பொய் சொல்ல பழகிவிட்டேன். "இதோ ஐந்து நிமிடத்தில் சமையல் ஆகிவிடும்" என்று அப்பொழுது தான் சமைக்க ஆரம்பிப்பது, "தொலைபெசிகரானை கூப்பிட்டேன் voice mail தான் சென்றது" என்று கூறிவிட்டு, நாளைக்கு கண்டிப்பாக கூப்டு விடவேண்டும் என்று மனதில் எழுதி வைத்துக்கொள்வது, இப்படியாக பல சில பொய்கள் என் வாழ்கையில் விளையாடி இருக்கிறது. நினைத்து பார்த்தால் நான் செய்வது விளையாட்டாக இருந்தாலும், அது சரியா தவறா என்ர விவாதம் என் மனதிற்குள்ளே எழுகிறது. அதற்கான விடையை நான் "நீயா நானா" நிகழ்ச்சியில் கேட்டேன். "என்றைக்கு மனசாட்சியை உறுத்தாமல் நாம் பொய் சொல்ல ஆரம்பிகிரோமோ, அன்றைக்கிருந்து நம் வாழ்கை தவறான வழியில் செல்கிறது."

"நீயா நானா" - எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய நிகழ்ச்சி.

No comments: